இறம்பொடை வெதமுல்லை தோட்டத்தில் இன்று குளவி கொட்டுக்கு இலக்காகி இருவர் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று முற்பகல் 11 30 அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தால் ஆண் தொழிலாளர்கள் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்..
நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறு அடிக்கடி மக்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வந்த போதிலும்,இதற்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கௌசல்யா
