Skip to content
March 3, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • Lifestyle
  • இரத்த சர்க்கரையை மட்டுமே குறைப்பது தீர்வல்ல; சித்த மருத்துவத்தின் பங்கு

இரத்த சர்க்கரையை மட்டுமே குறைப்பது தீர்வல்ல; சித்த மருத்துவத்தின் பங்கு

Malaikuruvi November 14, 2025
இரத்த சர்க்கரையை மட்டுமே குறைப்பது தீர்வல்ல; சித்த மருத்துவத்தின் பங்கு

இன்று நவம்பவர் 14 ஆம் திகதி உலக நீரிழிவு நாள்.

இன்றைய அதிவேக வாழ்க்கைமுறை, ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி குறைபாடு, மனஅழுத்தம் ஆகியவை நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை உலகளவில் அதிகரிக்கச் செய்கின்றன.

இன்று ஒவ்வொரு பத்துப் பேரில் ஒருவராவது இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது மருத்துவ புள்ளிவிபரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்தின் பார்வையில் நீரிழிவு

சித்த மருத்துவத்தின் பார்வையில், நீரிழிவு என்பது உடலின் மூன்று தாதுக்களின் (வாதம், பித்தம், கபம்) சமநிலையின்மை காரணமாக ஏற்படும் நோயாகக் கருதப்படுகிறது. எனவே, வெறும் இரத்த சர்க்கரை அளவை குறைப்பது மட்டுமல்லாமல், உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நலனை நோக்கமாகக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதிக இனிப்பு, எண்ணெய் உணவுகள், இரவில் தாமதமாக உறங்குதல், மரபணு காரணிகள் ஆகியவை நீரிழிவுக்கான முக்கியமான காரணிகளாகும்.

தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் எடை குறைவு, பார்வை மங்கல் போன்றவை இதன் வழக்கமான அறிகுறிகள் ஆகும்.

சித்த மருத்துவம் இயற்கை மூலிகைகளைக் கொண்டு நீரிழிவு கட்டுப்படுத்துவதற்கான நம்பத்தகுந்த வழிமுறைகளை வழங்குகிறது. இம்மருந்துகள் அரச சித்த வைத்தியர்களின் ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

சித்த சிகிச்சை மூன்று நிலைகளில் நடைபெறுகிறது:

  1. உடல் சுத்திகரிப்பு – திரிபலா சூரணம், நாவல் விதை சூரணம் போன்ற மருந்துகள்.
  2. நோயைக் கட்டுப்படுத்துதல் – நோயின் அடிப்படை காரணிகளைச் சீர்செய்யும் சிகிச்சை.
  3. வாழ்க்கைமுறை மாற்றம் – யோகாசனம், நடைபயிற்சி, மற்றும் ஆரோக்கிய உணவுப் பழக்கம்.

சமீபத்தில் பேராசிரியர் ரெஸ்னி காசிம் குறிப்பிட்டபடி, நீரிழிவு கால்காயங்கள் சில சமயங்களில் புற்றுநோயை விட ஆபத்தானவை. இதனையடுத்து, அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கமாகிய நாம், சித்த மருத்துவத்தை தேசிய நீரிழிவு சுகாதாரத் திட்டங்களில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.

ஆரம்ப நிலைகளிலேயே சித்த சிகிச்சை அளிக்கப்பட்டால், கால்காயங்களின் கடுமையான விளைவுகள் மற்றும் உறுப்புகள் இழப்பைத் தவிர்க்க முடியும்.

சித்த மருத்துவத்தில் கால்காயங்களுக்கு பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் வெளிச்சிகிச்சை முறைகள் உள்ளன. அவை நரம்பு, இரத்த ஓட்டக் கோளாறுகளைச் சரிசெய்து நோயாளிகளை குணமடையச் செய்கின்றன.

மேற்கத்திய மருத்துவர்களுடன் இணைந்து சித்த வைத்தியர்கள் பணியாற்றும் சூழல் உருவானால், நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறந்த பராமரிப்பு கிடைக்கும்.

இலங்கையில் தற்போது சுமார் 20 இலட்சம் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப நிலைகளிலேயே சித்த சிகிச்சை அளிக்கப்பட்டால், கால்காயங்களின் கடுமையான விளைவுகள் மற்றும் உறுப்புகள் இழப்பைத் தவிர்க்க முடியும்.

இலங்கையின் பொரளை தேசிய ஆயுர்வேத வைத்தியசாலை, கம்பஹா விக்கிரமராச்சி ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, கைதடி சித்த போதனா வைத்தியசாலை, கோணேசபுரி சித்த போதனா வைத்தியசாலை, மஞ்சந்தொடுவாய் மற்றும் நிந்தவூர் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை, பல்லேகலை, தியத்தலாவ, அனுராதபுரம் மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை, இரத்தினபுரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை, டீ.பீ. வெலகெதர மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை, கல்முனை, மொல்லிகொட, மின்னேரியவில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலை. ஓந்தாச்சிமடம், கப்பல்துறை, மாதம்பே, ஏறாவூர், மட்டக்களப்பின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு ஆகிய ஆதார வைத்தியசாலைகள், தள வைத்தியசாலைகளான மன்னார், வவுனியா, அச்சுவேலி, கிளிநொச்சி, கொத்மலை, கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகளான நேபட, வீதியகொட, கோபாலபுரம், பண்டத்தரிப்பு, கொடிகாமம், பன்விலை, நில்தண்டாஹின்ன, தொலுவ, நாரம்மல, நெதலகமுவ, வாரியபொல, அம்பன்பொல, முருதென்கே, நோர்த் மாத்தளை, தென்ன, கெலிஓய, தொலுவ ஆகிய இடங்களிலும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன.

இலங்கையின் சகல பிரதேச சபைகளின் கீழும் இயங்கும் இலவச சுதேச மருத்துவமனைகள் வழியாகவும் பொதுமக்கள் தரமான சிகிச்சைகளை இலவசமாகப் பெறமுடியும்

எனினும், இச்சேவைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பலர் இதன் முழுப் பயனையும் பெற முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 14 உலக நீரிழிவு தினத்தையொட்டி அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் நீரிழிவு பிரிவு வைத்தியர்கள் வெளியிட்ட அறிக்கை

தகவல்
அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்க நீரிழிவு நோய்ப் பிரிவு வைத்தியர்கள்.

தொகுபபு: கௌசல்யா

Post navigation

Previous: கற்பகம் விற்பனை நிலையம் கொழும்பில் மீண்டும் திறப்பு
Next: மஸ்கெலியாவில் கன மழை; தொழிலாளர்கள் அவதி

Related Stories

மாணவர்களே! நீங்கள் நாளைய தலைவர்கள்

மாணவர்களே! நீங்கள் நாளைய தலைவர்கள்

Malaikuruvi February 28, 2026
ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி 4 ஆவது தொகுதி ஆசிரியர்கள் கால் நூற்றாண்டு கல்விப்பணி

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி 4 ஆவது தொகுதி ஆசிரியர்கள் கால் நூற்றாண்டு கல்விப்பணி

Malaikuruvi February 28, 2026
உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! - ஆசாரி கணேசன்

உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! – ஆசாரி கணேசன்

பன்விலை ம. நவநீதன் February 18, 2026

Trending News

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் 1

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 2

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 3

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 4

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 5

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

Malaikuruvi March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்
  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |