Skip to content
March 3, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • உள்ளூர் செய்திகள்
  • இரத்தினபுரி வேவல்வத்தையில் குழந்தை மரணத்தில் துலங்காத மர்மம்!

இரத்தினபுரி வேவல்வத்தையில் குழந்தை மரணத்தில் துலங்காத மர்மம்!

Malaikuruvi December 26, 2025
இரத்தினபுரி வேவல்வத்தையில் குழந்தை மரணத்தில் துலங்காத மர்மம்!

உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது பிள்ளையை ஆற்றுக்கு அழைத்துச் சென்றது யார்?

இதுவரை நான்கு சிறுவர்கள் பலியெடுக்கப்பட்டி ருப்பதாகச் சொல்லும் ஊர் மக்கள், இது நிச்சயமாகப் பிசாசின் சேட்டையாக இருக்கலாம் என்று பதை பதைக்கிறார்கள்!

நத்தார் பண்டிகையைக் கொண்டாட முழு உலகமும் தயாராகிக்கொண்டிருந்ததைப் போலவே இரத்தினபுரி வேவல்வத்தை தோட்டத்தின் வெல்லவல திக்குமுக்குலா பிரிவு மக்களும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். தன் ஒன்றரை வயது பிள்ளையை உறங்கவைத்துவிட்டு மதிய உணவு தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் இந்தக் குழந்தையின் தாயார்.

உணவு தயாரித்து முடித்துவிட்டுப்போய் பிள்ளையைப் பார்த்தால் காணவில்லை. பதறியடித்துக்கொண்டு தேடினார். அப்போது வீட்டுக்குப் பின்புறமாக ஓடும் ஒரு சிற்றாற்றில் குழந்தையொன்று கிடப்பதாக அந்த வழியாகச் சென்ற ஒருவர் சொல்கிறார்!

ஆமாம்..அது அந்தப் பிள்ளைதான். நீரில் மூழ்கி இறந்துகிடப்பதை உறுதி செய்கிறார்கள் ஊர்மக்கள்.

இது எப்படி நடந்தது? உறங்கிக் கொண்டிருந்த குழந்தை எப்படி ஆற்றுக்குச் சென்றது? இது நிச்சயம் ஏதோ திருஷ்டியாகத்தான் இருக்க வேண்டும் என்று முழு ஊரே சந்தேகப்படுகிறது.சில காலத்திற்கு முன்பு இளம் கர்ப்பிணித் தாய் ஒருவர் அந்த ஆற்றுப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். அதற்குப் பின்னர் நான்கு பிள்ளைகள் இப்படி மர்மமாக இறந்துபோனதை நினைத்துப் பார்க்கிறது ஊர்ச் சனம்.

இந்தப் பிள்ளையும் உறக்கத்திலிருந்து எழுந்து நடந்து சென்று யாருடனோ உரையாடுகிறது. இது அயல் வீட்டிலுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியிருக்கிறது. அந்தக் குழந்தை உரையாடியது யாருடன்? அங்கு எந்த ஆளரவமும் இல்லையே.ஒரு வெள்ளைச் சேலைத் துணி மட்டும் காற்றில் அசைந்தாடுகிறது. அதனுடன்தான் அந்தப் பிள்ளை உரையாடுகிறதா? இது இறந்துபோன அந்த இளம் கர்ப்பிணித்தாயாக இருக்க வேண்டும் என்று பழைமை பேசுகிறது ஊர்.

இது மூட நம்பிக்கையா முட்டாள்தனமா? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இன்னமும் அறிவியலும் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

இதேபோன்ற ஒரு சம்பவம் அண்மையில் கொட்டகலை பகுதியிலும் நடந்திருக்கிறது. திருமண வீடு ஒன்றுக்குச் செல்வதற்காக வீட்டார் தயாராகிக் கொண்டிருந்தபோது பிள்ளையொன்று வீட்டோர ஆற்றில் வீழ்ந்து இறந்துபோனது. அது முற்றிலும் வீட்டாரின் கவனவீனம் என்று சொல்லப்பட்டது. ஆனால். வேவல்வத்தை திக்குமுக்குலா தோட்டத்தை திக்குமுக்காடச் செய்திருக்கும் குழந்தையின் மரணம் உண்மையைத் துலங்கச் செய்யுமா? என்பதே கேள்வியாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Post navigation

Previous: தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆடவர் தற்கொலைக்கு முயற்சி
Next: மின்னஞ்சல் குண்டு மிரட்டல் பீதியை ஏற்படுத்தும் முயற்சியா?

Related Stories

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

Malaikuruvi March 2, 2026

Trending News

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் 1

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 2

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 3

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 4

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 5

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

Malaikuruvi March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்
  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |