இரத்தினபுரி விபத்தில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்தார்.
இரத்தினபுரி மொரகஹயட்டை சந்தியில் இன்று 06 ஆம் திகதி காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் காயமடைந்தார்.
இரத்தினபுரி மாநகரத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை புரியும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இரத்தினபுரி புதிய நகரத்திலிருந்து இரத்தினபுரி மாநகர் நோக்கி வந்த கார் மீது பஸ் ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோதுண்டட கார் பெரும் சேதமடைந்த போதிலும் உயிர்ச் சேதம் எதுவுமில்லை
இது குறித்து இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பஸ் தனது கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி எஸ். ஆர். இரவீந்திரன்
