சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி திருவானக்கட்டை எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளிட்ட இரத்தினபுரி நகரில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளd.
இதனால் இந்த எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பெற்றோல், டீசல் விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருளுடன் வெள்ளநீர் கலந்திருக்க்கூடும் என்ற அச்சம் காரணமாக எரிபொருள் விற்பனை தற்காலிகமாக இடை உள்ளநிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க எலபாத்த பிரதேச செயலகப் பிரிவில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஒருவர் காணமால் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது
கலவான பகுதியில் சடலம் ஒன்று நீர்நிலையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் இது வரை அடையாளம் காணப்பட வில்லை
கடும் காற்று காரணமாக பெருந்தோட்டத் பகுதியிலுள்ள தொழிலாளர்களின் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எந்தான் பொலிஸ் பிரிவில் உள்ள மடலகம தோட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் கூரைகள் அள்ளுண்டு போயுள்ளன
கடந்த இரு நாட்களில் இம்மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 574 வீடுகள் சேத மடைந்துள்ளன. இத்தகவல்கள் தற்காலிகமானவை என் இரத்தினபுரி மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தத்தமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனைத் தவிர 679 குடும்பங்களை சேர்ந்த 2062 பேர் 52 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
இவர்களுக்கான சமைத்த உணவுகள் மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் மேற்பார்வையாளர்யின் கீழ் வழங்கப்படுகின்றன.
குடிநீர் மற்றும் மின்சாரம், துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்









வெள்ளத்தில் முரி;கியுள்ள திரிபுரசுந்தரி சமேத இரத்தினேஸ்வரம் சிவனாலயம்


