இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் சபரகமுவ மாகாண விழா இரத்தினபுரி நகரத்திலுள்ள சீவலி விளையாட்டு மைதானத்தில். சபரகமுவ மாகாண ஆளுநர் திருமதி ஜானகி சம்பா ராஜரட்ன தலைமையில் இன்று (04) காலை நடைபெற்றது
ஆளுநர் திருமதி ஜானகி சம்பா ராஜரட்ண தேசிய கொடியை ஏற்றியதுடன் பொலிஸ், இராணுவம் மற்றும் பிரதேச தமிழ், முஸ்லிம்,சிங்கள பாடசாலை மாணவர்களின் அணி வகுப்பினை யும் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சபரகமுவ மாகாண பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
காலை 8.00மணிக்கு ஆரம்பமான இவ்விழா முற்பகல் 11.00மணிக்கு முடிவடைந்தது.
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அதிகாரிகள் மாவட்ட அதிகாரிகள் பிரதேச பாடசாலை அதிபர்கள் கல்வி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
எஸ. ஆர். இரவீந்திரன்






