புதுடெல்லி: இந்தியாவால் தேடப்படும் தாவூத் இப்ராகிமுடன் தொடர்புள்ள ஒன்பது பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
அவர்கள் ஒன்பது பேரும் டெல்லி, மும்பை உட்பட நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (மே 30) தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி, மும்பை, பஞ்சாப் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் சிலர் வெளிநாட்டினர் என்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தெரிவித்தது.
அவர்களிடம் இருந்து ஏராளமான தோட்டாக்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
