இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு இன்று (பிப். 25) காலமானார். அவருக்கு வயது 101.
இரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனர்.
வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், இன்று உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மறைந்த தலைவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அன்னாரின் பூதவுடல் சென்னை தி. நகரில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியை பூரண அரச மரியாதையுடன் நடைபெறுகிறது.
