ஹட்டன் நல்லதண்ணி வழியாக சிவனடிபாத மலைக்குச் செல்லும் பிரதான சாலையில் உள்ள சமன் தேவாலயத்திற்கு அருகில் உள்ள சியத்த கங்குல ஓயா பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது.
யாத்திரிகர்கள் சிவனடி பாத மலை உச்சிக்குச் செல்ல முன் இந்த இடத்தில் உள்ள சியத்த கங்குல ஓயாவில் நிராடிய பின்னர் அங்கு உள்ள சமன் தேவாலயத்திற்குச் சென்று தரிசனம் செய்து விட்டு மலைக்கு செல்வது வழக்கம்.
அப் பகுதியில் பாரிய ஆபத்து சூழ்ந்து உள்ளது.ஆகையால் அப் பகுதியில் யாத்திரிகர்கள் செல்லா வண்ணம் இரும்பு வேலி அமைக்க வேண்டும்.
இதற்காண பணியை மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நோர்வூட் பிரதேச செயலாளர் மற்றும் சிவனடி பாத மலைக்குப் பொறுப்பான விகாராதிபதி நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முன் வர வேண்டும்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
