இரத்தினபுரி காவத்தை, நீலகாமம் அருச்னன் சாமி என்கின்ற சுப்பிரமணியம் அருச்சுனன் அவர்களின் பூவுடல் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகிறது.
அருச்சுனன் சாமி அவர்களின் பூவுடலை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கை ஐயப்ப தேசிய மகா சபையினர் மேற்கொண்டுள்ளனர்.
அருச்சுனன் சாமியின் பூவுடலை விமானம் மூலம் இலங்கைக்குக்காண்டு வருவதற்காக சபரிமலை ஐயப்ப ஆலயத்தினரும் கேரள அரசும் தேவையான அனைத்து ஒழுங்குகளையும் செய்து, இலங்கை ஐயப்ப மகா சபையினருக்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளனர். காவத்தை நீலகாமம் அருச்சுனன் சுவாமி அவர்கள் கடந்த 14ஆம் திகதியன்று ஐயப்பனிடத்தில் ஐக்கியமானார்.
