பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்- சுரேஷ் சாலி 72 மணித்தியாலம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் தொடர்ச்சியாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று காலை சுரேஷ் சாலியை பேலியகொடையில் கைதுசெய்தனர்.
