அமைச்சர் லால் காந்தவின் கண்டி மாவட்ட மக்கள் சந்திப்பு ஓகஸ்ட் 27 ஆம் திகதி நடைபெறுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டக் குழுத் தலைவரும் விவசாய, கால்நடை வள, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சருமான கே.டி. லால் காந்த தலைமையில் “நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் வட்டார சபை விசேட மக்கள் சந்திப்புக்கள் நாளை (2026 ஓகஸ்ட் 27) கண்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிர் இடம்பெறுகின்றன.
தேசிய மக்கள் சக்தியினால் (NPP) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டங்கள் காலை 9.30 இற்கு பரகடவெல்லை பிரதேச்திலும்,
காலை 10.30 தியபலாகொடை பகுதியிலும் பி.ப. 2.00 மணிக்கு பன்விலை அரத்தனை பகுதியிலும் பி.ப. 4.00 மணிக்கு பன்விலை நகரிலும் நடைபெறவுள்ளன.
நாட்டின் எதிர்கால அபிவிருத்தி கருதி கிராம சேவகர் பிரிவுகள் தோறும் அரசியல் குழுக்களை தாபிப்பதற்கும் அபிவிருத்தி குறித்து கலந்துயரயாடுவதற்கும் அமைச்சரின் இவ் விஜயத்தின் போது எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பன்விலை நிருபர் ம.நவநீதன்
