மஸ்கெலியா போலீஸ் நிலையத்திற்கு அருகாமையில் கங்கேவத்த தமிழ் வித்தியாலத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் பணப்பை இன்றைய தினம் தவறவிடப்பட்டிருந்தது.
அதனை கிங்கோர தோட்டத்தைச் சேர்ந்த துசாந்தன் என்பவர் தெருவில் இருந்து கண்டுடெடுத்து மஸ்கெலிய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
அதில் சுமார் 15000/- இற்கும் அதிகமான பணம், அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கட்டைகள் என்பன காணப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மஸ்கெலிய காவல் நிலைய அதிகாரிகள் பணப்பையை உரிய ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறான பாராட்ட வைக்கும் செயலைச் செய்த இளைஞனுக்கு மஸ்கெலிய போலீஸ் நிலைய அதிகாரிகள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
