மஸ்கெலியா பிரதேச சபையின் எல்நினோ விழிப்புணர்வு நடைபவனி நேற்று (16) நடைபெற்றது.
பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும்2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் மூன்றாம் நாளை(16.09.2026) ஒட்டி, பிரதேசசபை தலைவரின் தலைமையில் “சுற்றாடலைப் பாதுகாப்போம்” என்னும் கருப்பொருளில் மஸ்கெலியா பிரதேச சபை தொடக்கம் மஸ்கெலியா நகரம் வரையில் ‘எல்நினோ’தொடர்பான நடைபவனி நடைபெற்றது.



எல் நினோ (El Niño) என்பது பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதியில் மேற்பரப்பு நீர் இயல்பை விட அதிகமாக வெப்பமடைவதைக் குறிக்கும் ஒரு இயற்கை காலநிலை நிகழ்வாகும்.
இந்த வெப்பமயமாதல் காரணமாக உலகளாவிய மழைப்பொழிவு மற்றும் வானிலை அமைப்புகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு, சில பகுதிகளில் கடுமையான வறட்சியும், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் உருவாகின்றன.
இந்த விடயம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்களை கொண்டு முன்னெடுக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
