எதன்சைட் தோட்டத்தில் குடிநீர் வழங்கல் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த்,உறுப்பினர் சுப்பையா மகேந்திரன் ஆகியொரின் கோரிக்கைக்கு இணங்க, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எதன்சைட் தோட்டத்தில் குடிநீர் வழங்கல் வேலைத்திட்டம் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், உறுப்பினர் சுப்பையா மகேந்திரன்,உறுப்பினர் கணபதி கண்ணதாசன், தோட்டப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
