தவலந்தன்னையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கு நடைபெற்றது.
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தமிழ் மொழி மூலம் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு, கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தவலந்தன்னை தொண்டமான் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது .
கொத்மலை பிரதேச சபையின் தலைவர் அஜித் முரமுதலிகே தலைமையில் கருத்தரங்கு இன்று (18) நடைபெற்றது.


கொத்மலை பிரதேச சபையின் உபதலைவர் சண்முகதாஸ் , உறுப்பினர்களான புண்ணியமூர்த்தி, செல்வமதன் ,கமலதீபன், GLOBAL TRADING COMPANY உரிமையாளர் தட்சணாமூர்த்தி அழகுரத்தினம் (பாலு ), கொத்மலை பிரதேச சபையின் நூலகப் பொறுப்பாளர், நூலக உதவியாளர்கள், மடக்கும்புறை சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த வாசிகசாலையின் உத்தியோகத்தர்கள், கொத்மலை பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அதிபர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
தகவல்: சுரேன்
மேலும் வாசிக்க: இரத்தினபுரி தமிழ் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு எழுதுபொருள்கள்
