கண்டி ஹந்தானை தோட்டத்தின், கித்துல்முல்லை மேல் பிரிவில் இன்று (02) தோட்டத் தொழிலாளர்கள் மூவர் மீது குளவி கொட்டியதில், ஒருவர் உயிரிழந்தார்.மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக கலகா (Galaha) காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் ஜி. ஜி. சந்திரசேனா எனப்படும் 56 வயதுடைய நபராவார்.
மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் (JEDB) சொந்தமான இந்தத் தோட்டத்தில் தொழிலாளர்கள் மூவரும் தேயிலைத் தோட்டத்தில் களைநாசினி தெளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென குளவிகள் கலைந்து வந்து அவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளன.
குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட மூவரும் உடனடியாக கலகா பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கௌசல்யா
