திக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டபோது பிராந்திய நிருபர் பொலிஸாரால் உதாசீனம் செய்ய்பட்டதாகத் தெரிவிக்கின்றார்.
பிராந்திய நிருபர் எஸ். சதீஸ், பெத்தராசி தோட்டத்தில் சந்தேக நபர் தொடர்பான புகைப்படங்களையும் காணொலியையும் பதிவு செய்திருக்கிறார்.
அப்போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது கமராவைப் பறித்து அதிலிருந்த பதிவுகளை அழித்துவிட்டதாக நிருபர் தெரிவித்துள்ளார். தான் ஒரு பிராந்திய நிருபர் என்று கூறியும் பொலிஸார் தம்மை உதாசீனப்படுத்தியதாக அவர் தெரிவிக்கின்றார்.
பொதுமக்கள் படங்கள், காணொலிகளை எடுத்தபோது பொலிஸார் அதனைத் தடுக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
இதேவேளை, கொலையுண்ட தம்பதியின் இறுதிக்கிரியை இன்று மே 24 தரவளை பொது மயானத்தில் நடைபெற்றது.
கௌசல்யா
