மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழ்நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் நீண்ட வரிசையில் சாரதிகளும் வாகன உரிமையாளர்களும் எரிபொருள் நிரப்ப காத்திருக்கின்றனர்.
காவத்தை நகரில் நீண்ட வரிசையில் வாகனங்கள் இருப்பதனைப் படத்தில் காணலாம்.
பொது மக்களைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கமைய நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ். ஆர், இரவீந்திரன், இரத்தினபுரி
