குறைந்த வருமானம் பெறும் உடபளாத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொரகல கிராம சேவகர் பிரிவிலுள்ள 800 குடும்பங்களுக்கு விரும்பிய ஆடைகளை இலவசமாக தெரிவு செய்து கொள்ளும் வாய்ப்பினை கொழும்பு Dream J campus வழங்கியிருந்தது.
புத்தாண்டை முன்னிட்டு உடபளாத்த பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி ஜெயரட்ணவின் வழிகாட்டலில் சமுர்த்தி உத்தியோகத்தர் எம.யோகேஸ்வரன் மற்றும் கிராமசேவகர் S.M. சச்சிந்திர ஆகியோர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
புசல்லாவை ஓல்ட் பீகொக் தமிழ் வித்தியாலய மைதானத்தில் அதிபர் க.லோகேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
சப்லி,நிவ் பீகொக்,ஓல்ட் பீகொக்,தொரகல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த
சகல இன மக்களும் பெரிதும் தமக்கு விருப்பமான ஆடைகளை தாமேதெரிவு செய்து கொண்டு பயனடைந்தனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்





