தேரர்களுக்கு உதவிய தெவட்டகஹா பள்ளிவாசலுக்கு சஜித் நன்றி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கஸ்ஸப தேரர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமையைக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேரர்களின் சுகாதார வசதிகளுக்கு உதவிய தெவட்டகஹா பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, தேரர்கள் சுகாதார வசதிகளுக்காக அமைத்திருந்த கூடாரங்களைப் பொலிஸார் அகற்றியதைக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தேரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதைப் பொலிஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
தேரர் பொலிஸாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் நிலத்தில் சறுக்கி வீழ்ந்ததாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
