கண்டி பன்விலை நெல்லிமலை பாலத்தின் அவல நிலை தொடர்கிறது. கண்டி பன்விலை நெல்லிமலை பகுதியில் கடந்த தித்துவா புயலின்போது பாலங்கள், பாதைகள் சேதமடைந்தன.
அப்போது நெல்லிமலை பாலத்தை மக்கள் ஒன்றுசேர்ந்து தற்காலிகமாகச் செப்பனிட்டார்கள். இருந்தும் மீண்டும் அந்தப் பாலம் நீரில் அடித்துச்செல்லப்பட்டது. பாலத்தை ஒருவாறு கடந்தாலும் அதற்கப்பால் வெறும் சேற்று வயல் போன்ற பாதையில் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த அவல நிலை எப்போத முடிவுக்கு வரும் என்று மக்கள் ஏக்கத்திலிருக்கிறார்கள்.
பன்விலை ம. நவநீதன்
