லிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான இளம் முதியவர் மரணமடைந்துள்ளார்.
லிந்துலை ‘டிஆர்ஐ’ லெந்தோமஸ் தோட்டத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற குளவிக்கொட்டுத் தாக்குதலில் இளம் முதியவர் (70வயது) சுப்பிரமணியம் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மேலும் ஏழு பேர் குளவிக்கொட்டு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை தோட்டத்தில் தொழில் செய்து கொண்டிருக்கும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரையும் உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கௌசல்யா
