பாடசாலை மாணவியை மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கண்டி, கலஹா பிரதான வீதியின் தெல்தோட்டை லிட்டிள்வெளி பகுதியில் நேற்று (16)பிற்பகல் 12 வயது பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிளில் மோதிக் காயம் ஏற்படுத்தியரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
காலில் காயங்களுக்கு உள்ளான மாணவி தெல்தோட்டை பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்ப பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தெல்தோட்டை மலைமகள் இந்து மத்திய கல்லூரியில் பயின்று வரும் நிலையில் சம்பவ தினத்தன்று பாடசாலை விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்த நிலையில் இவ்வனர்த்தத்திற்கு முகம் கொடுக்க நேர்ந்தது.
கண்டி நிருபர் எஸ். சுந்தரலிங்கம்
