ஹப்புத்தளை நகரில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ரயில் பாதைக்கு அருகில் உள்ள இரண்டு வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தினால் இரு வீடுகளுக்கும் பகுதி அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும்,இதில் எவருக்கும் காயங்களோ உயிராபத்தோ ஏற்படவில்லை.
இதேவேளை, அந்தப் பகுதியில் நீடிக்கும் கடும் மழை காரணமாகப் பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஹப்புத்தளை – வியாரகலை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும் கற்கள் உருண்டு விழுந்ததில் அது சேதமடைந்துள்ளது.
