நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
கடந்த சில நாள்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது இதன் காரணமாக அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது
அத்துடன் மவுசாக்கலை நீர் தேக்க தத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 24 அடி குறைந்து உள்ளது இன்னும் 96 அடி நீர் தேக்கத்தில் உள்ளது காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 41 அடி குறைந்து உள்ளது
அதேபோல் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 3 மீட்டர் குறைந்து உள்ளது 1191 மீட்டர் நீர் தேக்கத்தில் உள்ளது கென்யோன் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 33 மீட்டர் குறைந்து உள்ளது 670 மீட்டர் நீர் தேக்க த்தில் உள்ளது.
மலையகத்தில் உள்ள அனைத்து காட்டாறுகள் நீர் வீழ்ச்சிகள் ஓடைகள் என்பனவற்றில் நீர் வரத்து குறைந்து கொண்டே வருகிறது.
இதன் காரணமாக மலையக பகுதியில் பல நகரங்கள் கிராமங்கள் தோட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நீர் மின் நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கங்களான காசல்ரீ மேல் கொத்மலை மவுஸ்சாகலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது
குறிப்பாக மவுஸ்சாகலை நீர் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் பிரதான ஆறுகளான சாமிமலை ஓயா காட்மோர் ஓயா மரே ஓயா சியத்தலகங்குல ஓயா மற்றும் ஏனைய ஓடைகளில் நீர் வரத்து குறைந்து கொண்டே வருகிறது.
அதேபோல் காசல்ரீ நீர் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான மாஎலிய ஓயா ,ஹட்டன் ஓயா என்பன ஓடைகளாகி மிக மிகச் சொற்ப அளவில் நீரையே வழங்குகிறது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


