கொழும்பு தமிழ்ச் சங்கமும் பனை அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்த “தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026” கண்காட்சியையும் விற்பனையையும் பெருந்தோட்டங்கள்,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று(08/05) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இக்கண்காட்சியும் விற்பனையும் மே 08 ஆம் 09 ஆம் திகதிகளில் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வெள்ளவத்தை தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறுகிறது.
இன்றைய ஆரம்ப நிகழ்ச்சியில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளங்குமரன், வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா ,மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ,கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்த ராஜா, பனை அபிவிருத்தி சபையின் தலைவர் ஆர் இரவீந்திரன், ஸ்ரீ விஜேந்திரன் , காண்டீபன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திருச்செல்வம், தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், வர்த்தகர்கள் பொதுமக்கள் அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






