கொழும்பு மட்டக்குளி விபத்தில் உயிரிழப்பு 3ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு, மட்டக்குளியில் நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த 3 முச்சக்கரவண்டிகள், 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து அதிவேகமாக மோதி இந்தப் பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிராண்ட்பாஸ், கொழும்பு 15, வத்தளை பகுதிகளைச் சேர்ந்த 64 வயதுடைய இருவரும் 44 வயதுடைய ஒருவரும் உயிரிழந்தனர். 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.மட்டக்குளி பொலிஸார் கார்ச் சாரதியைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
