கொட்டகலை பிரதேச சபையின் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் வைபவம் இன்று (17) நடைபெற்றது.
பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கொட்டகலை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை(17.09.2026) ஒட்டி, வயோதிபர்களுக்கான இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் வேலைத்திட்டம் சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் சபையின் உப தலைவர் யாகுல மேரி , உறுப்பினர்களான நந்தகோபால் பாஸ்கரன் ,பொன்னையா ரவிச்சந்திரன்,சுரேஷ் , கணபதி கண்ணதாசன், சுப்பையா மகேந்திரன், சாந்தினி , ரசிகா ஜீவனி, ராஜேந்திரன் , செயலாளர் சிவராம் ராஜவீரன் ஆகியோருடன் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.



