இரத்தினபுரி சிவன் கோவில் சைவ பரிபாலன மகா சபையின் ஏற்பாட்டில் இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் ஐந்து மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக சிசுசவிய வினாத்தாள் அடங்கிய புத்தகம் பெற்றுக்கொடுகப்பட்டது.
பாடசாலையில் 27 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற மிகவும் எளிமையான வைபவத்தில் இப்புத்தகங்கள் மாணவர்களுக்குக் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சைவ பரிபாலன மகா சபையின் தலைவர் பொன்.சிவாஜி,
பொருளாளரும் இரத்தினபுரி பிரதேச சபையின் உத்தியோத்தருமான எஸ். வினோதன், இரத்தினபுரி பிரதேச செயலாக அதிகாரி எஸ். உதயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்










