கோப்புப் படம்
மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்பிரகமுவை, மத்திய, தென், வடமத்திய,வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
