கணினி அறிவியல் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்று மலையகத்திற்குப் பெருமை சேர்த்த நரசிம்மன் இராமநாதன்!
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 52-வது பட்டமளிப்பு விழாவில், நுவரெலியா வலயக் கணினி வள நிலைய முகாமையாளரும் (ITDLH Manager), கல்வியியலாளருமான நரசிம்மன் இராமநாதன்,கணினி அறிவியல் துறையில் முதுமாணிப் பட்டத்தை (MSc in Computer Science) பெற்றுக்கொண்டுள்ளார்.
16.10.2026 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில், நுவரெலியா வலயக் கணினி வள நிலைய முகாமையாளரும் (ITDLH Manager), கல்வியியலாளருமான திரு. நரசிம்மன் இராமநாதன் அவர்கள் கணினி அறிவியல் துறையில் முதுமாணிப் பட்டத்தை (MSc in Computer Science) பெற்றுக்கொண்டுள்ளார்.
மலையகக் கல்வித்துறையில் கணினி மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கல்வியின் (ICT) வளர்ச்சிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இவர், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றார்.
இந்நிலையில், கணினி அறிவியல் துறையில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ள அவரது சாதனை, அவரது தனிப்பட்ட கல்வி முன்னேற்றத்தை மட்டுமன்றி, மலையகக் கல்விச் சமூகத்தின் வளர்ச்சிக்கும் பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
கல்வியே சமூக மாற்றத்திற்கான வலிமையான ஆயுதம் என்பதைத் தனது கல்விப் பயணத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ள திரு. நரசிம்மன் இராமநாதன் அவர்களின் இச்சாதனை, மலையக இளைஞர்கள் மற்றும் கல்வித்துறையில் பயணிக்கும் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைகின்றது.
தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அவர், எதிர்காலத்தில் மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் டிஜிட்டல் அறிவாற்றலை மேம்படுத்துவதற்கும் மேலும் சிறப்பான பங்களிப்புகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவரது உயரிய கல்விச் சாதனையையும் கல்வித்துறைக்கான அர்ப்பணிப்பையும் பாராட்டி, மலையகக் கல்விச் சமூகம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக உளமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கௌசல்யா
