மாத்தளை இறத்தோட்டை மிட்லண்ட்ஸ் கிராமத்தைச் சேர்ந்த செல்வி உதயகுமார் ரதிகலா, யாழ் பல்கலைக்கழகத்தில் 41 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில் சிறப்புக் கலைமாணி (BA HONS IN MEDIA STUDIES) பட்டத்தினைப் பெற்றுக்கொண்டர்.

இவர் தனது க.பொ.த சாதாரண தரம் வரையிலான கல்வியை மிட்லண்ட்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் பெற்றுக் கொண்டதோடு ,தனது உயர்தரக் கல்வியைக் கண்டி ரஜவலை இந்து தேசிய பாடசாலையில் பெற்றுக் கொண்டார்.
தனது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இன்று மாபெரும் வெற்றி இலக்கை எட்டியுள்ளார். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தாய், தந்தை, தங்கை உட்பட்ட குடும்ப உறுப்பினர்களோடு ஏனைய உறவினர்கள், வழிகாட்டிய ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் இத்தருணத்தில் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
