இன்ஜெஸ்ரி மாணவன் திலக்ஷன் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
அட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் 1 இல் 85 வருட வரலாற்றைக்கொண்ட கஷ்டப் பிரதேச பாடசாலையான டிக்கோயா இன்ஜெஸ்றி தமிழ் வித்தியாலயத்தில் வரலாற்றில் முதன்முதலாக மாணவன் டி.திலக்க்ஷன் 2026 அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் அட்டன் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவ்வெற்றிக்கு வழிகாட்டிய பாடசாலை அதிபர் திருமதி கே.சுலோக்ஷனா, மாணவனைப் பயிற்றுவித்த ஆசிரியர் எஸ்.குமரகுரு ஆகியோருக்குப் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
