யாழ்ப் பல்கலைக்கழகத்தில் 8 விருதுகளுடன் முதலாம் வகுப்பில் சித்தி பெற்ற மஸ்கெலியா மாணவி நவரட்ணம் சுபாஷினக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மஸ்கெலியா, களனிவத்தை தோட்டத்தைச் சேர்ந்த நவரட்ணம் சுபாஷினி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சிறப்புக்கலைமாணிப் பட்டப்படிப்பில் முதலாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

நவரட்ணம் சரஸ்வதி தம்பதியின் புதல்வியான இவர், தனது கல்வித் திறமைக்காக ஒரு தங்கப் பதக்கத்தையும் 8 சிறப்பு விருதுகளையும் வென்றுள்ளார்.
வருக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர் ராஜ் அசோக் முதலானோர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மலையகப் பெருந்தோட்டப் பகுதியிலிருந்து சென்று கல்வியில் சாதனைகளைப் புரிந்துள்ள சுபாஷினி, தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
மஸ்கெலியா நிருபர்
