நுவரெலியா மாவட்டம் கிளண்டவன் தோட்டத்தைச் சேர்ந்த சந்திரமோகன் சாலினி கிழக்குப் பல்கலைகழத்தின் 30 ஆவது பொது பட்டமளிப்பு விழாவில் முதலாம் நாளின் இரண்டாவது அமர்வில் தமிழ் சிறப்பு கற்கைகள் துறையில் (Bachelor of Arts (Honors in Tamil) தமிழ் சிறப்பு இளங்லைமாணி பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார் (Second Class Upper).
இவர் தனது ஆரம்பக் கல்வியை கிளண்டவன் தமிழ் வித்தியாலயத்திலும் சாதாரண தரக் கல்வியை லிடெஸ்டல் தமிழ் மகாவித்தியாலத்திலும் உயர்தரக் கல்வியை இராகலை உயர் தேசிய பாடசாலையிலும் பெற்றுக்கொண்டார்.


குடும்பத்தின் முதல் பட்டதாரியான இவர் தன்னை ஒரு பட்டதாரியாக சமூகத்தில் உயர்த்திக்காட்ட அரும்பாடுட்ட தனது தந்தைக்கும் திருமணத்தின் பின் எப்போதும் தனது கல்விக்கும் இலட்சியத்திற்கும் உறுதுணையாய் நிற்கின்ற தனது கணவர் பிரதீபனுக்கும் இந்தப் பட்டத்தைச் சமர்ப்பிப்பதோடு எல்லா வழிகளிலும் உதவி புரிந்த வழிகாட்டிய உறவினர்கள் ஆசிரியர்கள் நலன் விரும்பிகளுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி கூறியுள்ளார்.
மென்மேலும் பல பட்டங்களையும் வெற்றியையும் பெற அனைவர் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
