வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு

வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு

வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளைக் குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் (USTR) தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer) இடையிலான இணையவழி கலந்துரையாடல் இன்று (25) இடம்பெற்றது. இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகளைக் குறைப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது, இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும். இந்த இணையவழி கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலக (USTR) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கமல் ஹாசன் எம்பியாக சத்தியப்பிரமாணம்

கமல் ஹாசன் எம்பியாக சத்தியப்பிரமாணம்

நடிகர் கமல் ஹாசன் எம்பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் இன்று பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இவருடன் மேலும் திமுக உறுப்பினர்கள் மூவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 2024 சட்ட சபைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளித்தமைக்காக அவருக்கு மேல் சபையில் உறுப்பினர் பதவி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது. பார்த்தசாரதி ஶ்ரீனிவாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் கமல் ஹாசன் 1954 நவம்பர் ஏழாந்திகதி பிறந்தவர். 70 வயதான அவர் தேசிய அரசியலில் முதற்தடவையாகப் பிரவேசிக்கின்றார். திரு. கமல் ஹாசன் தமிழ் மொழியில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இன்று பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதையடுத்து அவரது மகள் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர். இன்று பதவியேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கடற்கரைக்கு அருகில் இன்று (20) காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள யூரோ மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஆரம்பத்தில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அதனை அண்டிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பென்சனுக்கு ஆப்புவைக்கும் சட்டமூலம் விரைவில்

பென்சனுக்கு ஆப்புவைக்கும் சட்டமூலம் விரைவில்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பென்சனுக்கு ஆப்புவைக்கும் சட்டமூலம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள்தவிர ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும் நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன்களுக்காக சிறந்த முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளன எனவும் அவர் கூறினார். அமைச்சர் நேற்று நெடுந்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார். நெடுந்தீவு பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விளக்கமளித்தார். அதன்பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், ” தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தப்பவே…

மலைநாட்டில் நிரம்பி வழியும் நீர்த்தேங்கங்கள்

மலைநாட்டில் நிரம்பி வழியும் நீர்த்தேங்கங்கள்

மலைநாட்டில் நிரம்பி வழியும் நீர்த்தேங்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் இன்று காலை முதல் நிரம்பி வழிகின்றது. அத்துடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல்லே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. எனவே, தாழ்நிலப் பகுதிகளில் வாழ்பவர்கள் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீமுறே விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்

மீமுறே விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்

மீமுறே விபத்தில் நால்வர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீமுரே கரம்பகொல்ல பகுதியில் நேற்று (19) மாலை வேன் ஒன்று கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது. மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சுற்றுலாவிற்காக மீமுரே பகுதிக்கு சென்றபோது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். விபத்தில் சிக்கிய வேன், அதிக வளைவு கொண்ட பிரதான வீதியின் மேல் வளைவிலிருந்து கீழ் வளைவு வரை 30 மீற்றர் கவிழ்ந்து மீண்டும் பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளது. விபத்தில் இறந்தவர்களில் மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் அடங்கின்றனர். அதேநேரம், விபத்தில் குழந்தையொன்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் வேனில் 6 பேர் இருந்துள்ளதுடன், வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இன்று முதல் காற்று தொடரும்

இன்று முதல் காற்று தொடரும்

இன்று முதல் காற்று தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவ பெயர்ச்சி அதிகரிப்பு காரணமாக நாட்டில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

நிலந்த ஜயவர்தன பதவி நீக்கப்பட்டார்

நிலந்த ஜயவர்தன பதவி நீக்கப்பட்டார்

நிலந்த ஜயவர்தன பதவி நீக்கப்பட்டார் என்று தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கடமை தவறியதாக குற்றம் சாட்டப்படிருந்தார். இதன்படி அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடத்த முடிவு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்தது. இதற்கமைய முறையான ஒழுங்கு விசாரணையின் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயத்தால் 2025.07.04 அன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட முறையான ஒழுங்கு விசாரணை அறிக்கை, முறைப்பாட்டை…

வத்தளையில் ஒருவர் வெட்டிக் கொலை

வத்தளையில் ஒருவர் வெட்டிக் கொலை

வத்தளையில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வத்தளை, ஹேகித்தை அல்விஸ்வத்தை பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர், வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில், முகமூடி அணிந்த நால்வர் முச்சக்கர வண்டியில் வந்து, வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். சம்பவத்தின் போது, உயிரிழந்தவரின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர் என தெரிய வருகிறது. கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 43 வயதான இந்த நபர், சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்து தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். முதற்கட்ட விசாரணைகளில், 2023 ஆம் ஆண்டு மஹாபாகே பகுதியில் இடம்பெற்ற ஒரு சுட்டுக்கொலைச் சம்பவத்தில், இவர் உதவியவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம்…

தெமோதரை பாலம் கவர்ச்சிக்கு மாறுகிறது

தெமோதரை பாலம் கவர்ச்சிக்கு மாறுகிறது

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், இரவு நேரத்தில் மின் விளக்குகளால் பாலத்தை ஒளிரச் செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் 2025 ஓகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இப்பகுதி மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு அதிகரித்த பின்னர், பார்வையிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொப்பித்தோட்டம் தங்கா