நுவரெலியா வர்த்தக சங்கம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோருக்கு தொழில் முனைவுக்கு அப்பாற்பட்டு வழிகாட்டுதல், அவர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சர்வதேச சந்தைக்கு வழி நடத்துதல் மற்றும் புதிய தொழில்முனைவோரை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் நுவரெலியா வர்த்தக சங்கம் நிறுவப்பட்டது.
அரலியா குழு நிறுவனங்களின் தலைவர் திரு. டட்லி சிறிசேன அவர்களின் அனுசரணையில், நுவரெலியாவில் உள்ள அரலியா ரெட் ஹோட்டலில் அண்மையில் நுவரெலியா வர்த்தக சங்கம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நுவரெலியா வர்த்தக சங்கத்தின் அதிகாரப்பூர்வ பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி. துஷாரி தென்னக்கோன், நுவரெலியா வர்த்தக சங்கத்தின் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.
நுவரெலியா மேயர் உப்பாலி வணிகசேகர, முன்னாள் மேயர் மஹிந்த டொடம் பேகம, நுவரெலியா மாவட்ட செயலகத்தின் சிறு வணிகப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் வர்த்தக சங்கத்தின் தலைவர் பண்டாரா, பத்திரிகையாளர் டக்ளஸ் நாணாயக்கார, நுவரெலியா வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
