இலங்கை, இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, நேற்று (27) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தில், புனித அந்தோனியாரின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கலந்துகொண்டு, திருவிழாக் கொடியினை ஏற்றிவைத்து விழாவைத் தொடக்கி வைத்தார்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து, யாழ் மறைமாவட்ட ஆயர் ஜெபரத்தினத்தின் தலைமையில், பல பங்குத்தந்தைகள் கலந்துகொண்டு விசேட கூட்டுப் பிரார்த்தனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
