ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் அம்பகமுவ பிரதேசபை சபை உறுப்பினர் இரா.ஜீவன் இராஜேந்திரன் நிதி ஒதுக்கீட்டில் கினிகத்தேன பிளக்வாட்டர் அம்மன் கோவில் வீதி புனரமைப்பு பணி இன்று ஆம்பமானது.
அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்தல, உறுப்பினர் இரா. ஜீவன் இராஜேந்திரன் ஆகியோரால் இன்று புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அம்பகமுவ பிரதேசசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாவட்டக்கிளை தலைவர் மதியோகராஜா, தோட்டப் பொது மக்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
வட்டவளை கேதீஸ்



