கொட்டகலையில் உள்ளூராட்சி வார நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.
பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கொட்டகலை பிரதேச சபை முன்னெடுத்த 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாளான 19.09.2026 சனிக்கிழமை “சான்றிதழ் வழங்கல், பரிசளிப்பு தினம்” எனும் கருப்பொருளின் கீழ் கொட்டகலை பிரதேச சபையினால் நடத்தப்பட்ட கிரிக்கெட், பூப் பந்து,சித்திர போட்டிகளுக்கானதும், கொட்டகலை பிரதேச சபையிற்குட்பட்ட பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற மாணவர்களுக்குமான சான்றிதழ்கள், கேடயங்கள்,பதக்கங்கள் வழங்கலும்
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் வூட்டன் ஹில்ஸ் கோவில் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் யாகுல மேரி , உறுப்பினர்களான நந்தகோபால் பாஸ்கரன் ,லெட்சுமன் விஸ்வநாதன் , கணபதி கண்ணதாசன், சுப்பையா மகேந்திரன், சாந்தினி , ரசிகா ஜீவனி, நேசமலர், ராஜேந்திரன் , சுதர்சன், திம்புள்ளை பத்தனை பொலிஸ் உத்தியோகத்தர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,பிரதேச சபையின் செயலாளர் சிவராம் ராஜவீரன் ஆகியோருடன் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
