வட்டவளை மீனாட்சி தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார தேர்த் திருவிழா விஞ்ஞாபனம் 2026
அம்பிகையின் அடியார்களே மத்திய மாகாணம் மீனாட்சி தோட்டம் எனும் பகுதியில் அடியார்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு நிகழும் மங்கலகரமான விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 04 ஆம் நாள் 18.03.2026. புதன்கிழமை சதுர்த்தி திதியும் புரட்டாதி நட்சத்திரமும் சித்தயோகம் கூடிய காலை 05 மணி முதல் 08.27 வரை வரும் சுப முகூர்த்தத்தில் வருடாந்த தேர்த்திருவிழா நடைபெற தேவியின் திருவருள் கைகூடி யுள்ளது.
பக்த அடியார்கள் ஆசார சீலர்களாக அனைவரும் வருகை தந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
கிரியா கால நிகழ்வுகள் 18.03.2026. புதன்கிழமை …
கிரியா கால குருமார்களாக குமரகுருமணி இளங்கோ ஜோதிட சிரேஷ்ட அலங்கார பூசணம் சிவஸ்ரீ வேலுரா சத்தியமூர்த்தி சர்மா இவரோடு இணைந்து சிவ ஸ்ரீ சண்முகதாஸ் சர்மா, தலவாக்கலை. சிவ ஸ்ரீ செல்வகுமார் சர்மா, கண்டி. சிவஸ்ரீ அருள் ஷர்மா.
குறிப்பு 22,03.2026 அன்று தோட்ட இளைஞர்களின் அனுசரணையுடன் மெய்யெடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்
அனைவரும் வருக அம்பிகையின் அருள் பெறுக
தகவல் – மீனாட்சி தோட்ட முத்துமாரியம்மன் ஆலய ஊடகப் பிரிவு


