தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வழங்குமாறு கோரி மகளிர் குழுவொன்று இன்று (18) பொகவந்தலாவை நகரில் பேரணியையும் கவனவீர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.
பொருளாதாரத்திற்கான மகளிர் அமைப்பினால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது சூழல்சார் விவசாயத்திற்கான கொள்கை அத்தியாவசியமானது, ஊதியமற்ற பராமரிப்பு உழைப்பைப் பாதுகாப்போம்,
தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு மற்றும் காணி உரிமையைப் பாதுகாப்போம், விவசாயிகளின் விதை உரிமையைப் பாதுகாப்போம், தீவிர நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகள் வேண்டாம், நுண்கடன் நெருக்கடிக்குத் தீர்வு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
