பெல்மதுளை லெல்லுபிட்டி தோட்டம், பெரண்டுவை பிரிவில் 30 அறைகள் கொண்ட லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் 06 லயன் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.



இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,நேற்றைய தினம் (29.09.2026) நேரில் சென்று சந்தித்து அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் அப்போது உறுதியளித்தார்.
