கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்பரீட்சைக்கு இம்முறை (2026) தோற்றும் மாணவர்களுக்கு, அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO)இலவசமாக நடத்தும் பாடரீதியான கருத்தரங்கிற்காக கையேடுகளை வழங்கியது.
இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று (07) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்தக் கையேடுகள் பாடசாலை அதிபர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் பெருந்தோட்ட கல்வி அபிவிருத்திக்கான இணைப்பாளர் எம்.பி. சந்திரசேகரன் தெரிவித்தார்.



இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:
சபரகமுவை மாகாணத்திலுள்ள 31 தமிழ் பாடசாலைகளுக்கு இந்தக் கையேடுகள் பகிர்தளிக்கப்பட்டன.
இதன் மூலம் ஆரம்பக் கட்டமாக 1095 மாணவர்கள் பயன் பெறுவர்.
கருப்பாடங்களானஆறு பாடங்களுக்கும் தனித்தனியாக இந்தக் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.
எமது கடந்தகால செயற்பாடுகள் காரணமாக சபரகமுவை மாகாண தமிழ் மொழி மாணவர்களின் குறிப்பாக, தோட்டப் பகுதி பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிகண்டு வருகிறது
இதற்குப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்றார்.
இரத்தினபுரி எஸ்.ஆர்.இரவீந்திரன்
