அப்புத்தளையைச் சேர்ந்த தமிழ்மாறன் சரத்குமார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய கலைப் போட்டிகளில் சாதனைபடைத்து தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார்.
தனது திறமையை வெளிப்படுத்தி,அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி ஈட்டித் தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார்.
இவர் பின்வரும் துறைகளில் முத்திரை பதித்துள்ளார்:
கர்நாடக சங்கீதம்
அறிவிப்புத்துறை
திரையிசைப் பாடல்
பல்துறைகளில் ஜொலிக்கும் இத்தகைய திறமையான இளைஞருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். மேலும் இவர் தேசிய மட்டத்திலும் சாதனை படைக்க வாழ்த்துகள்!
