மஸ்கெலியா பொலிஸார் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி காலை 9 மணிக்கு மஸ்கெலியா நகர மைதானத்தில் நடைபெறுகிறது.
ஹற்றன் பொலிஸ் பிரிவிலுள்ள எட்டுப் பொலிஸ் நிலையங்களின் அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்.
ஹற்றன், நோர்வுட், பொகவந்தலாவை, மஸ்கெலியா, நல்லதண்ணி, நோட்டன் பிரிட்ஜ், கினிகத்தேனை, வட்டவளை ஆகிய நிலையங்களின் அணிகளைச் சேர்ந்த அந்தப் பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வீரர்கள் பங்குபற்ற முடியும்.
நுழைவுக் கட்டணம் மூவாயிரம் ரூபாய். பங்குபற்றும் அணி பந்தைக் கொண்டு வர வேண்டும்.
முதற்பரிசாக சம்பியன் கிண்ணமும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக வெற்றிக் கேடயமும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும்
தொடர்புகளுக்கு ஏற்பாட்டுக்குழு மஸ்கெலியா பொலிஸ் நிலையம் 071 945 3507, 071 659 1126
