கண்டி பன்விலை நெல்லிமலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில், விஜயதசமி விழாவும் வித்தியாரமமும் வித்தியாலய அதிபர் எம். நவநீதன் தலைமையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இன்று (20)சிறப்பாக நடைபெற்றன.
இதில் பின்தன்னை பிளாண்டேஷன் நிறுவனத்தின் முகாமையாளர், வெளிக்கள உத்தியோகத்தர், பொதுமக்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சைவ போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
கல்வியின் ஆரம்பத்தைச் சிறப்பிக்கும் வித்தியாரம்ப நிகழ்ச்சியும், மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் கலை நிகழ்ச்சிகளும் விழாவுக்குச் சிறப்பு சேர்த்தன.
