நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட சாஹிரா வித்தியாலயத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சி நேற்று (22) நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றன.

பாடசாலையின் 25 ஆண்டுகால கல்விப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் கலை,கௌரவிப்பு நிகழ்வுகள்,பரிசளிப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கௌசல்யா
