நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா,இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (22) இரவு 10.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டம்: உடபலாத்தை, மெததும்பறை, குண்டசாலை
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவை
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, எலப்பத்தை, குருவிட்டை
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்ட பிரதேசச் செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்:
மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதி வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகளும் நிலச்சரிவு,பாறைச்சரிவு அபாயங்கள் குறித்து அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
மண்சரிவுக்கான அறிகுறிகள் (மண்ணில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள்/மின் கம்பங்கள் சாய்வது, திடீரென ஊற்றுநீர் தோன்றுவது போன்றவை) தென்பட்டால், உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
